1000
590

உடல் எடையை குறைத்துக்கொண்டு இருக்கும் தல

உடல் எடையை குறைத்துக்கொண்டு இருக்கும் தல

தல அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் படம் ஹிட், தோல்வி தாண்டி மிகப்பெரும் ரசிகர்கள் பலம் இவருக்கும் பல வருடமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே செம்ம ஹிட் அடித்தது.


தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகின்றார்.

மேலும், அஜித் இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார், இந்த கதாபாத்திரத்திற்காக அஜித் தற்போது தன் உடல் எடையை குறைத்து வருகின்றார்.

அதோடு கருப்பு முடியுடன் மீண்டும் தோன்ற, பழைய அஜித்தை பார்த்தது போல் உள்ளதாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு முன்பு அஜித் விவேகம் படத்திற்காக மிக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வலிமை படப்பிடிப்பில் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் தான் தற்போதைய வைரல், இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்களேன்…

ஆசிரியர் - Editor