1000
590

எங்களை மட்டும் கொரோனா தாக்காதா?

எங்களை மட்டும் கொரோனா தாக்காதா?

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, மத்திய - மாநில அரசுகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்; கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவ வேண்டும்; சளி, இருமல் இருப்பவர்கள் சுவாசக் கவசம் அணிந்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.

ஆனால், 24 மணிநேரமும் துப்புரவுப் பணியில் இருக்கும் ஊழியர் களும் மனிதர்கள்தான் என் பதை மறந்து விடுகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங் கள் எதையும் வழங்காமல்தான் இப்போதும் வேலைவாங்கி வருகின்றனர்.இந்நிலையில், மும்பை நகரத்தில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள் (Safaiwala) தங்களுக்கு சானிடைசர்கள் மற்றும் முகமூடி, காலணிகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்டப் பாதுகாப்புக் கருவிகள்வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

6 ஆயிரத்து 500 ஒப்பந்தத் துப்புரவு ஊழியர்களின் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து பிரிகான் மும்பைமாநகராட்சி (BMC) ஆணையாளர்பர்தேஷிக்கு, மும்பையின் கச்சாராவஹ்துக் ஷ்ராமிக் சங்கம் (Kachara Vahatuk Shramik Sangh), கடிதம் எழுதியுள்ளது. அதில், கொரோனாவேகமாக பரவிவரும் மகாராஷ்டிரமாநிலத்தில், 48 மணி நேரத்திற்குள்துப்புரவுத் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாவிட்டால், வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

“திடக்கழிவு மேலாண்மைத் துறையில் சுமார் 6 ஆயிரத்து 500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா (COVID-19) தொற்றுநோய் இருந்தபோதிலும், இந்தத் தொழிலாளர்களுக்கு முறையான முகமூடிகள், கையுறைகள், சீருடை, காலணிகள் மற்றும் சோப்புஅல்லது சுத்திகரிப்பான் வழங்கப் படவில்லை. இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் போதுமான அளவு பாதுகாக்கப்படாவிட்டால் அவர்கள் தங்கள் வேலையைச் செய்யமுடியாது” என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் மிலிந்த் ராணடே கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor