1000
590

கொரோனா தடுப்பு பணி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

சென்னை,மார்ச் 20- தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை, போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும்,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது போராட்டத் திற்கு ஆதரவாக மனு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர்கள், ஜன நாயக அமைப்பில் போராட் டம் என்பது அடிப்படை உரிமை என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், கொரோனா அச்சம் காரண மாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க, அரசு அறிவுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.  எனவே, ஏப்ரல் 21ஆம் தேதி வரை, போராட்டங் களோ அல்லது பேரணிகளோ நடத்த யாருக்கும் அனுமதி கொடுக்கக்கூடாது என, தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.  வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஆசிரியர் - Editor