1000
590

தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பகுதியில் கொரானா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு 14 நாட்களின் பின் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படாமையினால் இன்று (25) அவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதலும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நபர்கள் கடந்த 09 திகதி இந்தியாவுக்கு சென்று வந்ததன் காரணமாகவே இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த தனிமை படுத்தலின் போது மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வந்தனர்.

அதனை தொடர்ந்து இவர்களுக்கு கொவிட் 19 என்ற வைரஸ் பரவவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டதனை தொடர்ந்து அவர்களை சமூகமயமாக்கும் நடவடிக்கை இன்று (25) மஸ்கெலியா பொது சுகாதர வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

இந்நிகழ்வுக்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மஸ்கெலியா பிரதேச சபை தலைவி திருமதி செம்பகவள்ளி, பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தனிமைப்படுத்துவது நல்ல விடயம் எனவும் இதனொல் தாங்களும் தங்கள் குடும்பமும் அயலவர்களும் பாதுகாப்பு பெறுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் - Editor