மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் மதபோதகர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்..

மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் மதபோதகர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்..

யாழ்.செம்மணி - பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியதுடன் அவருடைய ஆராதனைகளில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு போதகர் குடும்பத்தினருடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். 

திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். குறித்த போதகர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார். எனினும், செம்மணி தேவலயத்திற்கு சென்று திரும்பியவர்கள், 

சுவிஸ் போதகடுன் பழகியவர்கள் தேடப்படும் நிலையில், குறித்த போதகரும் அடையாளம் காணப்பட்டு நேற்று இரவு முதல் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். 

ஆசிரியர் - Editor