1000

ரூ.6,400 கோடிக்கு துணை பட்ஜெட்

ரூ.6,400 கோடிக்கு துணை பட்ஜெட்

ருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்காக ரூ.198.37 கோடி கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காக ரூ.112.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2019-2020ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்காக ரூ.6,409 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதல்வர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் மேலும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா கிருமித் தொற்று தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பின் மூலம் துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டது.

ஆசிரியர் - Editor