1000

ஊர் திரும்ப முண்டியடித்த மக்கள்

ஊர் திரும்ப முண்டியடித்த மக்கள்

சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்ல பல­ரும் முண்­டி­ய­டித்­த­தால் சென்னை கோயம்­பேடு பேருந்து நிலை­யத்­தில் கடந்த இரு தினங்­க­ளாக மக்­கள் கூட்­டம் அலை­மோ­தி­யது.

கொரோனா கிருமித் தொற்­று பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், மாநி­லம் முழு­வ­தும் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று மாலை தொடங்கி எதிர்வரும் 31ஆம் தேதி வரை இந்த தடை உத்­த­ரவு நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து சென்­னை­யில் வேலை பார்ப்­ப­வர்­களும், பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக சென்­னைக்கு குறு­கிய கால பய­ணம் மேற்­கொண்­ட­வர்­களும் உட­ன­டி­யாக சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்ல முடிவு செய்­த­னர். 

இத­னால் கோயம்­பேடு பேருந்து நிலை­யத்­தில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் குவி­யத் தொடங்­கி­னர். இத­னால் அனைத்து பேருந்­து­களும் நிரம்பி வழிந்­தன. வழக்­கத்தைவிட குறை­வான பேருந்­து­களே இயக்­கப்­ப­டு­வ­தாக பொதுமக்­கள் சிலர் அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

எனி­னும் நிலை­மை­யைச் சமா­ளிக்க சென்­னைக்­குள் மட்­டும் இயக்­கப்­படும் மெட்ரோ போக்­கு­வ­ரத்து கழ­கத்­தின் பேருந்­து­க­ளை­யும் வெளி­யூர்­க­ளுக்கு இயக்க போக்­கு­வ­ரத்துத் துறை அமைச்­சர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் உத்­த­ர­விட்­டார்.

இதே போல் கோவை, சேலம், திருப்­பூர் உள்­ளிட்ட நக­ரங்­களில் இருந்து கடந்த இரு தினங்­க­ளாக ஏரா­ள­மா­னோர் சொந்த ஊர்­க­ளுக்­குப் புறப்­பட்­டுச் சென்­ற­னர். 

தமி­ழ­கம் முழு­வ­தும் நேற்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்­த­ரவு அம­லுக்கு வந்­துள்­ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

ஆசிரியர் - Editor