1000

மிக மோசமான சூழலை சுவிஸ் எதிர்கொள்ளப் போகிறது: எச்சரிக்கும் தொற்றுநோய் நிபுணர்கள்

மிக மோசமான சூழலை சுவிஸ் எதிர்கொள்ளப் போகிறது: எச்சரிக்கும் தொற்றுநோய் நிபுணர்கள்

கொரோனா வைரஸ் தொடர்பிலான மரண எண்ணிக்கையில் சுவிஸ் மிக மோசமான சூழலை எதிர்கொள்ளவிருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் இன்னும் பல எண்ணிக்கையிலான நோயாளிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இடம் உள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக மிக மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளின் வருகை, அடுத்த சில நாட்களில் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

தற்போது கொரோனாவுக்கு இலக்கான 35 நோயாளிகள் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இருவர் இந்த மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

ஆனால் சுவிட்சர்லாந்தின் தொற்றுநோய் நிபுணர் ஹ்யூகோ சாக்ஸ் தற்போதைய சூழல் தொடர்பில் கடும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கும் அவர், மரண எண்ணிக்கை பல ஆயிரங்களை தொடும் என்கிறார்.

மேலும் டிஸினோ மண்டலத்தில் இருந்த அதே சூழல் தற்போது சூரிசில் இருப்பதாகவும், அங்கே ஏற்கெனவே 120 பேர் கொரோனாவுக்கு பலியானதையும் சாக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழலில் அவசர தேவைக்கு ஒரு மருத்துவமனையை உருவாக்குவதே வரவேற்கத்தக்க செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

திடீரென்று ஒரு பேரலை உருவானால், கண்டிப்பாக அதை எதிர்கொள்ள முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் எனவும் சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்


ஆசிரியர் - Editor