1000

சுவிஸ் நிபுணரின் கண்டுபிடிப்பையே உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகிறது

சுவிஸ் நிபுணரின் கண்டுபிடிப்பையே உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகிறது

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கைகளை சுத்தப்படுத்த உலகின் பல நாடுகள் அறிவுறுத்தி வரும் தற்போதைய சூழலில், இந்த சுவிஸ் தொற்றுநோயியல் நிபுணரை யாரும் மறக்க முடியாது.

பிரித்தானியாவின் உயரிய விருதுகள், ஜேர்மனியின் மிகவும் மதிப்புமிக்க அறிவியல் விருதுகளில் ஒன்றான Robert Koch Prize உள்ளிட்ட உலகின் உயரிய விருதுகளை கைப்பற்றிய ஜெனிவாவின் தொற்றுநோயியல் நிபுணர் Didier Pittet தான் அவர்.

தற்போது 63 வயதாகும் Didier Pittet அன்று கண்டுபிடித்தது தான் தற்போதைய கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற hand hygiene gels.

1994 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கைகளுக்கான சுகாதாரத்தை பேண மருத்துவ பணியாளர்கள் புறக்கணித்து வந்ததை Pittet கவனித்துள்ளார்.

இதுகுறித்து ஆலோசனையில் முழுகிய அவருக்கு அதன் விடையும் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் சோப்பால் தங்கள் கைகளை சுத்தப்படுத்தும் நிலை ஏற்பட்டால் அது நேரத்தை வீணடிப்பதேயாகும்.

இதற்கு உடனடி நிவாரணம் தேவை என முடிவு செய்த Pittet, மருந்தாளர் வில்லியம் கிரிஃபித்தின் சூத்திரத்தின் அடிப்படையில் ஆல்கஹால் அடிப்படையிலான கை சுகாதார ஜெல் ஒன்றை உருவாக்கினார்.

மட்டுமின்றி அதை ஊழியர்களுக்கு விநியோகித்தார். நோய்த்தொற்றுகள் 50 சதவீதம் குறைந்ததை அவர் நேரடியாக கண்டறியவும் முடிந்தது.

Didier Pittet-ன் இந்த அரிய கண்டுபிடிப்பை பல உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் ஆதரித்து ஏற்றுக்கொண்டது.

தற்போது 180 நாடுகளில் சுமார் 20,000 மருத்துவமனைகளில் இவரது hand hygiene gels பயன்பாட்டில் உள்ளன.

மட்டுமின்றி இஸ்லாமிய மத பண்டிதர்களும் நோய்த்தொற்று அண்டாமல் இருக்க ஆல்கஹால் அடிப்படையிலான கை சுகாதார ஜெல்லை பயன்படுத்துகின்றனர்.

Pittet-ன் இந்த அரிய கண்டுபிடிப்பு ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியன் உயிர்களைக் காப்பாற்றுகிறது என்று WHO மதிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor