1000

ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி

ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1036 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளை மொத்தமாக முடக்கி வரும் கொரோனா பாதிப்புக்கு சுவிட்சர்லாந்தில் மொத்தம் 19,303 பேர்க்ள் இலக்காகியுள்ளனர்.

இதுவரை சிகிச்சை பலனின்றி 484 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பெர்னீஸ் ஜூராவில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் 20 முதியவர்களுக்கும் 9 ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அனைவரும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல சுகாதார மையத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை அடுத்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே குறித்த காப்பகமானது தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் காப்பகம் அமைந்துள்ள பகுதி தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரத்தை அடுத்து பெர்ன் மண்டலத்தில் செயல்படும் அனைத்து முதியோர் காப்பகங்களையும் கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor