1000

நாடு முழுவதும் பாதிப்பு 2500 தமிழகத்தில் 411; ஒரே நாளில் 102

நாடு முழுவதும் பாதிப்பு 2500 தமிழகத்தில் 411; ஒரே நாளில் 102

இனிதான் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

புதுதில்லி, ஏப்.3-  இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2500 பேராக அதிக ரித்துள்ளது. இனிதான் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரு கின்ற கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வரு கிறது. கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இரட்டிப்பா னது. ஏப்ரல் 2 ஆம் தேதி பாதிக்கப் பட்டோர் 328 பேர், பலியானோர் 12 பேர் என்று பதிவாகியிருந்தன . மத் திய சுகாதார அமைச்சகம் கூறியபடி, தற்போது 2,069 பாதிக்கப்பட்டோர் உள்ளனர். பலியானோர் 53 பேர், 156 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலங்களின் அதிகாரிகள் அளித்த தகவலின்படி 2,500-க்கும் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்பு எண் ணிக்கை 56 பேராகவும் உள்ளது.

மகாராஷ்டிராவில் 335 பேர் பாதிக் கப்பட்டு உள்ளனர். கேரளாவில் 286 பேர், தமிழ்நாட்டில் 309 பேர் மற்றும் தில்லியில் 219 பேர், கர்நாடகாவில் 124 பேர், உத்தரப்பிரதேசத்தில் 285 பேர், தெலுங்கானாவில் 107 பேர், ராஜஸ்தானில் 133 பேர், மத்தியப்பிர தேசத்தில் 99 பேர் , குஜராத்தில் 87 பேர், ஆந்திராவில் 132 பேர், ஜம்மு- காஷ்மீ ரில் 62 பேர், பஞ்சாபில் 46 பேர், அரி யானாவில் 47 பேர், மேற்கு வங்கத்தில் 53 பேர், பீகாரில் 24 பேர், சண்டிக ரில் 16 பேர், லடாக்கில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி யுள்ளன. அசாமில் 5, சத்தீஸ்கரில் 9, கோவாவில் 5, இமாச்சல பிர தேசத்தில் 3, ஜார்க்கண்டில் 1, மணிப் பூர் மற்றும் மிசோரத்தில் 1, ஒடிசா வில் 4, புதுச்சேரியில் 3, உத்தரகாண் டில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி யுள்ளது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்து உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது.

தமிழகத்தில் 411 பேர்

கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதி கரித்துள்ளன. தமிழகத்தில் வெள்ளி யன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதன்மூலம் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 411 பேராக அதிகரித்துள்ள தாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள் ளார். 

தமிழகத்தில் 2,10,538 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள் ளனர். 23, 689 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்கள் 3,396 பேர்.1,580 பேர் வெள்ளியன்று புதி தாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 3,684 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப் பட்டதில் 2,789 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறி யப்பட்டுள்ளது. 411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. ஏழு பேர் முழுமமையாக குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். 484 பேரின் ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட் டுள்ளது.

வியாழக்கிழமை 309 இருந்த கொரோனோ தொற்று எண்ணிக்கை வெள்ளியன்று 484 ஆக அதிகரித் துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 102 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த வேகத்தில் அதிகரித்தால், ஊர டங்கு 21 நாட்கள் முடிவில் பத்தாயி ரம் பேரை தாண்டும் என்று கூறப்படு கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மார்ச் 25 அன்று 606 பாதிப்பாக இருந்தது. ஏப்ரல் 1 அன்று 1,637 பேராக அதிகரித்தது. 

பிரதமர் மோடி வீடியோ கான்ப ரன்சிங் மூலம் பேசுகையில், கொரோ னாவுக்கு எதிரான போர் இப்போது தான் தொடங்கியிருக்கிறது. இதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கி விடக்கூடாது; எந்த தவறும் நடந்து விடக்கூடாது. கொரோனாவுக்கு எதி ரான போர் சுகாதார பணியாளர்கள், போலீசார், அரசாங்கத்துக்கு மட்டு மானது என்று யாரும் கருதிவிடக் கூடாது. ஒவ்வொருவரும் இதை தனக்கு எதிரான போராக கருத வேண் டும் என்று மக்களை கேட்டுக்கொண் டார்.

இந்தியாவில் முதல் 200 நோயாளி களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட மிக அதிக நாட்கள் எடுத்தது. பிப்ரவரி 15 அன்று இந்தியாவில் முதல் நப ருக்கு கேரளாவில் கொரோனா ஏற் பட்டது. அதன்பின் மார்ச் 20 அன்று தான் 200-வது நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அதாவது 200 பேருக்கு கொரோனா ஏற்பட 35 நாட்கள் ஆனது. ஆனால் திடீரென்று வேகம் எடுத்துள் ளது. வியாழனன்று ஒரே நாளில் மட் டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 15 இல் இருந்து இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட எடுத்துக் கொண்ட காலம் சரியாக 45 நாட்கள். மார்ச் 29 அன்று இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட்டது. மற்ற உலக உலக நாடுகளை விட இது மெதுவானது என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. முதலில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவும்.அதன்பின்னர் திடீரென்று வேகம் எடுத்து, வரிசையாக பலரை தாக் கும். 

கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவக் கூடியது. இது தான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப் பிட்ட காலத்தில் வேகம் எடுக்க கார ணம். எனவே இந்தியர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டிய காலம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வில கலுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பல நாடு களில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் மற் றும் அனுபவங்கள் உணர்த்துகின்றன.
 

ஆசிரியர் - Editor