1000

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி

விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. jpkHஇந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது முதியவர் இன்று உயரிழந்தார். இது தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மார்ச் 25ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆசிரியர் - Editor