1000

கொரோனா தடுப்பு பணி: புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணி: புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் ஆலோசனை

 கொரோனா வைரஸ் எனும் உயிரை பரிக்கும் கொடி நோய் மனித  சமூகத்திற்கு மிகப்பெரும் அச்சு றுத்தலாக மாறியிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மாநில அரசு முன்னெச்சரிக்கை தடுப்பு  பணிகளை போர்க்கால அடிப்படை யில் செய்து வருகிறது. இந்த நடவடிக்  கைகளை மேலும் உறுதிப்படுத்தும்  வகையில் பொருத்தமான அணுகு முறையை மேற்கொள்வதுடன் குறை பாடுகள் களைய வேண்டியதன் அவ சியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிரதேச செயலாளர் ஆர்.  ராஜாங்கம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருக்கிறார். இந்திரா காந்தி அரசு மருத்துவ மனை மருத்துவக்கல்லூரியில் நோய் பாதித்தவர்கள் மற்றும் நோய்  அறிகுறி உள்ளவர்களை தங்க  வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது . இப்பணியில் மருத்து வர்கள், செவிலி யர்கள், பல்நோக்கு ஊழியர்கள் பொறுப்புணர்வோடு பணியாற்றி வருகிறார்கள்.

ஆனால் பல்நோக்கு ஊழியர்கள் அடிமட்ட கூலியாக பணிதன்மைக்கு ஏற்ப ரூ. 3,500, ரூ 4,500, ரூ 5,500  என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப் பட்டு வருகிறது. நிரந்தரமற்ற பணி காரணமாக, நோய் தொற்று ஏற்பட் டால் தனது வருமானத்தை மட்டும் நம்பியுள்ள குடும்பம் நிற்கதியாகுமே என்று கவலை அடைந்துள்ள னர். எனவே, ஒருங்கி ணைந்த கொரோனா நோய் எதிர்ப்பு பணியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்யும் வகையிலும் பணி பாது காப்புக்காக ஆயுள் காப்பீடு செய்து கொடுக்க வேண் டும். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு சாத னங்கள் வழங்கி பாதுகாப்பு நடவ டிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பு பணியில்  ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியா ளர்கள், வருவாய் துறை பணியாளர் கள், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க முன்வர வேண்டும்.

ஏழை மக்கள் உயிர் பாதுகப்பு, ஊட்டச்சத்தில் மிகுந்த கவனம் கொள்  வது கொரோனா நோய் தடுப்பு நட வடிக்கையில் உள்ளார்ந்த அம்ச மாகும். ஆகவே, மக்களுக்கு மாநில  அரசு அறிவித்த நிவாரண தொகை யோடு தேவையான உணவுப் பொருட்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட பயனா ளிகளுக்கு வீடுதோறும் வழங்குவதற்கு நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை குடிமைப்பொருள் வழங்கல் துறை, அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்கள், வெளி  மாநிலத்தை சேர்ந்த தொழிலா ளர்கள், ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளி மாநி லத்தவர்களுக்கு தங்கும் வசதியும், உணவும் வழங்கி பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைந்து அர்ப்பணிப்போடு உறுதியோடு கொரோனா நோயை எதிர்த்து மாநில  மக்களை பாதுகாப்பதற்கான இந்த போராட்டத்தில் மாநி அரசும், தலை மைச் செயலாளரும் இணைந்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் - Editor