1000

கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க... டேனியல் பாலாஜி வேண்டுகோள்

கவுதம் மேனன் இனிமேல் அப்படி செய்யாதீங்க... டேனியல் பாலாஜி வேண்டுகோள்

தற்போது கவுதம் மேனன், கமல் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் டேனியல் பாலாஜி கேட்கப்பட்டது. 


இதற்கு அவர், முதல் பாகத்தில் என்னை கொன்று விட்டார்கள். அதனால் இரண்டாம் பாகத்தில் எனக்கு  வேலை இருக்காது என்று நினைக்கிறேன். இப்போ கவுதம் மேனனுக்கு நிறைய பெரிய நடிகர்கள் தெரியும். அவரே  நடிக்கவும் செய்கிறார். அதனால் எனக்கு வாய்ப்பு குறைவுதான். 

கவுதம் மேனனுக்கு ஒன்னு சொல்லணும் ஆசைப்படுகிறேன், 'என்னை அறிந்தால் படத்தில் நான் ரெண்டு சீன்ல நடித்தேன். அதில் ஒரு சீனை எடுத்து விட்டு ஒன்றுதான் வைத்தார்கள். அப்போது கவுதம்மேனன் அருண்விஜய்யிடம் என்னுடைய உடல் மொழி, மேனரிசம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும், அவன் எப்படி பார்க்கிறான், எப்படி திரும்புகிறான் என்பதை கவனிக்க சொன்னார். அது தவறு, இதுபோல் அவர் செய்ய கூடாது. ஒரு கேரக்டரை வேற மாதிரி கிரியேட் பண்ணுனுமே தவிர அதே மாதிரி உருவாக்க கூடாது' என்றார்.


ஆசிரியர் - Editor