1000

மகாராஷ்டிராவில் மேலும் 26 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் மேலும் 26 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 20-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மகாராஷ்டிராவில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆசிரியர் - Editor