1000

மேலும் மூவருக்கு கொரோனா.

மேலும் மூவருக்கு கொரோனா.
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று மாத்திரம் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சுகாதார  அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா  தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின் 1390 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா  தொற்றினால் நாட்டில் இதுவரை   ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 29  பேர் பூரண குணமடைந்து  வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்

அத்துடன் 140 பேர்  சிகிச்சைபபெற்றுவருவதோடு 273 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது 
ஆசிரியர் - Editor