1000

ஒபெக் அமைப்பிற்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு

ஒபெக் அமைப்பிற்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக இரு தரப்பினருக்கம் இடையில் உற்பத்தியை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக ஒபெக் அமைப்பிற்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடிக்கும் கருத்து முரண்பாடே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலக பரவும் நோயாக மாற்றமடைந்துள்ளமை, மற்றும் சவுதி அரேபியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான விலை தொடர்பான மோதல் காரணமாக, உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இருபது டொலர்களாக குறைவடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், ரஷ்யாவுடனான விலை நெருக்கடியை தீர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, எண்ணெய் விலை முப்பது டொலராக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவிற்கும் ஒபெக் அமை;பிற்கும் இடையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் என ஒபெக் அமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor