1000

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஆப்கானிஸ்தானில் கைது

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஆப்கானிஸ்தானில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் மேலும் 19 ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முன்னதாக தலைநகர் காபுலுக்கு அருகாமையில் உள்ள வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 விவசாயிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அஸ்லாம் பாருக்கி பாகிஸ்தானிலும் அப்கானிஸ்தானிலும் அரச படையணிகளுக்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டவர் என அந்த தளபதி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor