1000

எண்ணிக்கை குறைவடைந்துள்ளது..!

எண்ணிக்கை குறைவடைந்துள்ளது..!

இத்தாலில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், முதன் முறையாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று குறைவடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான கட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 68 பேரில் 74 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த விடயம் தமக்கு ஓரளவான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் அஞ்சலோ பொரல்லி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இத்தாலிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியினில் 15 ஆயிரத்து 632 பேர் மரணித்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினம் வரவுள்ள நிலையில், ரோம், மிலான் மற்றும் நப்பிள்ஸ் ஆகிய பிரதேசங்களுக்கு அதிக அளவில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது வரவேற்கத்தக்க விடயமாக கருத முடியாது என தெரிவித்துள்ளதுடன், தற்போது அமுலில் உள்ள சட்ட திட்டங்களை அவர்கள் மீறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிய மக்களுக்கு உதவும் நோக்கில் உக்ரேனின் விசேட மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor