1000

ஊரடங்குச் சட்டம் பற்றி புதிய அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் பற்றி புதிய அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை மாலை 4 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீள தளர்த்தப்பட்டும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor