1000

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 517 மில்லியனாக அதிகரிப்பு

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 517 மில்லியனாக அதிகரிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு  517 மில்லியனாக அதிகரிப்பு கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இன்றும் (08) 97 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் வழங்கிய 29.5 மில்லியன் ரூபாவையும், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 2.8 மில்லியன் ரூபாவையும், அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தனது அமைச்சுப் பதவிக்கான ஏப்ரல் மாத சம்பளத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைத்தனர்.

யுனிலீவர் ஸ்ரீ லங்கா லிமிடற் 10 மில்லியன் ரூபா, முகாமைத்துவம் தொடர்பான பட்டப் பின்படிப்பு நிறுவனம் 5 மில்லியன் ரூபா, கிரம விமலஜோதி தேரர் பௌத்த கலாசார மத்திய நிலையம் 2 மில்லியன் ரூபா, அத்தனகல்ல ரஜமகா விகாரை 10 மில்லியன் ரூபா மற்றும் மலலசேகர மன்றம் 3 மில்லியன் ரூபா உள்ளடங்களாக இன்று (08) நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 517 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள  முடியும்.

ஆசிரியர் - Editor