1000

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று (07) நடைபெற்றது.

செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..

அதில் சுகாதார துறை சம்பந்தமான பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்டில் உள்ள சகல மருந்தகங்களும் திறக்கப்பட வேண்டும்.

சகல ஆயுர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும் திறக்கப்பட வேண்டும்.

சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது நடமாடும் சேவையை முன்னெடுக்கவும் அனுமதியளித்தல்.

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சள்(வெனிவெல்கட்டை coscinium fenestratum calk , tree turmeric )யை இறக்குமதி செய்தல்.

ஆயுர்வேத சிகிச்சையை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை அஞ்சல் மூலம் பெற வழியேற்படுத்தி கொடுத்தல் முதலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசிரியர் - Editor