1000

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுத்யாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஷ்கனியிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் வரிசை முகம்மது, பொறியாளர்  காதர் மீரான், தொழிலதிபர் காஃபத்துல்லா, அப்துல் ஜப்பார், மாவட்டத் துணைத்தலைவர் சாதுல்லகான், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.முஹம்மது யாக்கூப், நகர்தலைவர் எஸ்.ஏ.சீனி முஹம்மது, நகர் செயலாளர் எஸ்.கதியத்துல்லா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் - Editor