1000

ஸ்பெயினில் 14,555 பேர் பலி

ஸ்பெயினில் 14,555 பேர் பலி

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 510 பேர் பலியாகியுள்ளனர்.

இதனடிப்படையில் ஸ்பெயினில் இதுவரையில் 14 ஆயிரத்து 555 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 4 ஆயிரத்து 748 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர் - Editor