1000

வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் எழுந்துள்ள புதிய குழப்பம்

வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் எழுந்துள்ள புதிய குழப்பம்

நடிகர் அஜித் விஸ்வாசம் மற்றும் மேற்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித், நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சண்டை காட்சிகளை ஸ்பெயின் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் எடுக்க படக்குழு திட்டமிட்டுருந்தது, ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் அங்கு படப்பிடிப்பு நடப்பது கேள்வி குறியே.

இதன் காரணமாக இயக்குனர் எச்.வினோத் இந்தியாவிலே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் - Editor