பூரண குணமடைந்த பிரித்தானிய பிரதமர்..!

பூரண குணமடைந்த பிரித்தானிய பிரதமர்..!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளுக்கு அவர் செல்வதை தவிர்க்கும் படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பிரதமர் சிகிச்சை பெற்று வரும் காலப்பகுதியில் அவரின் கடமைகள் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப்  மேற்கொண்டு வருகின்றார்.

அதேவேளை, உலக தலைவர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது தலைவர் பொரிஸ் ஜொன்ஸன் ஆவார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானியாவில் 7 ஆயிரத்து 978 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அதிக உயிரிழப்புக்களை கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா தற்போது திகழ்கிறது.

ஆசிரியர் - Editor