பிரித்தானியா கொரோனாவை எப்படி எதிர்கொள்கிறது? இளவரசர் வில்லியம்

பிரித்தானியா கொரோனாவை எப்படி எதிர்கொள்கிறது? இளவரசர் வில்லியம்

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் பிரித்தானியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என இளவரசர் வில்லியம் கூறியுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது நாட்டை ஊக்குவிக்க முயன்ற அரச குடும்பத்தினரின் தொடர்ச்சியான செய்திகள் வரிசையில் சமீபத்தியததாக இளவரசர் வில்லியமுடையது வெளிவந்துள்ளது.

எலிசபெத் மகாராணி கடந்த வாரத்தில் இரண்டு முறை பிரித்தானியா மக்களிடையே உரையாற்றியுள்ளார், அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எலிசபெத் மகாராணியின் மகனான இளவரசர் சார்லஸ், குணமடைந்ததிலிருந்து பல வீடியோ மற்றும் ஆடியோ செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியதை அடுத்து இளவரசர் வில்லியமின் செய்தி வந்துள்ளது.

நெருக்கடியை எதிர்கொள்ளும் போது பிரித்தானியா மிகச் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன் என்று ராணியின் பேரனான இளவரசர் வில்லியம் வடக்கு இங்கிலாந்தில் சமூக தொண்டு நிறுவனத்துடனான தொலைபேசி அழைப்பின் போது கூறினார்.

குறித்த தொண்டு நிறுவனம் உணவு வங்கி நடத்தி வருகிறது மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கி வருகிறது.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைகிறோம், அந்த சமூக ஆற்றல் தான் எல்லாவற்றையும் விட ஊந்துதலாக இருக்கிறது என இளவரசர் வில்லியம் கூறினார்.

தனது தந்தை சார்லஸுக்குப் பிறகு அரியணைக்கு இரண்டாவது வரிசையில் இருக்கும் வில்லியம், 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய அவசர அறக்கட்டளையின் (நெட்) ஆதரவாளராகிவிட்டார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது.


ஆசிரியர் - Editor