பிரித்தானியாவில் குறைந்த கொரோனா இறப்புகள்

பிரித்தானியாவில் குறைந்த கொரோனா இறப்புகள்

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், ஒரு மாதத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கை இதுவென தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 21,000 கடந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 180 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இந்த மாதம் 1 ஆம் திகதியில் இருந்து பலியானோரின் எண்ணிக்கை மளமளவென உயர ஆரம்பித்தது.

தினந்தோறும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது. ஏப்ரல் 7 ஆம் திகதியில் இருந்து 750 மேற்பட்டோர் தினந்தோறும் பலியாகினர்.

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பலி எண்ணிக்கை 500-க்கு கீழ் குறைந்தது. அதன்பிறகு சற்றென உயர்ந்தது. இந்நிலையில் நேற்று 413 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 360-ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, NHS-ல் 47 ஆண்டுகள் பணியாற்றிய இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் கமலேஷ் குமார் மாஸன் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

78 வயதான மருத்துவர் மாஸன் மறைவுக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களால், நேர்மையானவர், கனிவான மற்றும் தாராள மனதுடைய மனிதர் என்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor