ஊடகவியலாளர் மீது இனவெறித்தாக்குதல்

ஊடகவியலாளர் மீது இனவெறித்தாக்குதல்

இந்திய வம்சாவளி ஊடகவியலாளர் மீது இனவெறித்தாக்குதல் நடத்திய பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய நெறிமுறைகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தத்தைத் தொடர்ந்து, Leicester city centreஇலிருந்து நேரலை ஒளிபரப்பு ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தார் BBCயின் Sima Kotecha.

அப்போது Russel Rawlingson (50) என்பவர் Simaவை இனரீதியாக மோசமாக விமர்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த Simaவால் அந்த ஒளிபரப்பை தொடரமுடியாமல் போயிருக்கிறது. இதனால் வருத்தமும் கோபமும் அடைந்த Sima, உடனடியாக ஒளிபரப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள Sima, நானும் எனது குழுவினரும் இனரீதியாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்காக

வந்திருந்தவர்களை பேட்டி எடுக்காமலே வீட்டுக்கு அனுப்பியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

மிக முக்கிய நிக்ழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப முடியாமல் போய்விட்டது. நான் பயங்கர கோபமாக இருக்கிறேன் என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார் Sima.

Leicestershire பொலிசார் Russelஐ கைது செய்ததுடன், அவர் மீது அச்சுறுத்தும்/துஷ்பிரயோகிக்கும்/வருத்தப்படச்செய்யும்வார்த்தைகள்/துன்புறுத்தும் நடத்தை முதலான தாக்குதல்கள் நடத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leicester இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor