சுவிட்சர்லாந்தில் குறைந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம்

சுவிட்சர்லாந்தில் குறைந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம்

கடந்த மாதம் 119,781 பேர் வேலையில்லாமலிருப்பதாகப் பதிவு செய்ததையடுத்து சுவிட்சர்லாந்தில் வேலையில்லாமை விகிதம் 2.9 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவிகிதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தைவிட ஏப்ரலில் 10,632 குறைந்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் குறைந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரலை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 26,546 பேர் கூடுதலாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

2016ஆம் ஆண்டு 3.3 சதவிகிதமாக இருந்த சுவிட்சர்லாந்தின் வேலையில்லாத் திண்டாட்டம் 2017இல் 3.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் வேலையில்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கை 26.5 சதவிகிதமும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11.9 சதவிகிதமும் குறைந்துள்ளது.

இன்னொருபக்கம் 194,000 பேர் வேலைக்காக பதிவு செய்திருக்க 14,000 வேலை வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக உள்ளூர் வேலை வாய்ப்பு மையங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor