1000

சுவிட்சர்லாந்திற்கு ஆபத்து

சுவிட்சர்லாந்திற்கு ஆபத்து

கோவிட் -19 தொற்றை தொடர்ந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஐரோப்பாவில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை சுவிட்சர்லாந்திற்கு ஆபத்து என்று Ueli Maurer எச்சரித்துள்ளார்.

செவ்வாயான நேற்று (19.05.2020) உள்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பாக இத்தாலியில் கடன் நெருக்கடி ஏறபடுமாயின் அதனால் சுவிட்சர்லாந்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து தான் கவலைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இத்தாலி சுவிட்சர்லாந்திற்கு மிக முக்கியமான வாடிக்கையாளர். இத்தாலியில் கடன் நெருக்கடி ஏற்பட்டால் சுவிட்சர்லாந்திற்கு மிகவும் ஆபத்தானது. அத்தோடு நாம் வலுவான மற்றும் ஒன்றுபட்ட ஐரோப்பாவைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆசிரியர் - Editor