1000

சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor