1000

இந்தியாவிலிருந்து 16 பில்லியன் டாலர் முதலீடு

இந்தியாவிலிருந்து 16 பில்லியன் டாலர் முதலீடு

கொரோனா தொற்றை ஒட்டிய ஊரடங்கு காலத்தில் ஆசியாவிலிருந்து 26 பில்லியன் டாலர்களை அந்நிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 16 பில்லியன் டாலர் களை (சுமார் ரூ. 1 லட்சம் கோடி) எடுத்துக்கொண்டு அந்நியமுதலீட்டாளர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையைஊக்குவிக்கவும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரவும் மோடி தலைமையிலான அரசு சுமார்20 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களும் கூட, முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்கமுடியவில்லை. 

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் மீது அதிகளவில் வர்த்தகம் நடந்தாலும் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்திய சந்தையில் இருந்து அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (Portfolio Investors) சுமார் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். இந்த 9 ஆயிரத்து 600 கோடியிலும், 90 சதவிகித முதலீட்டை மே 12 அறிவிப்புக்குப் பின்னரே வெளியேற்றியுள்ளனர்.மத்திய நிதியமைச்சகம், ஆழமான ஆய்வுகளைச் செய்தே அறிவித்ததாக கூறப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய்மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அந்நியபோர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை என குளோபல் முதலீட்டு வங்கியான “நோமுரா”வும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர் - Editor