1000

பயிற்சிகளை ஆரம்பிக்க தயார்

பயிற்சிகளை ஆரம்பிக்க தயார்

அரசாங்கம் அனுமதிக்கும் பட்சத்தில், எதிர்வரும் யூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பயிற்சிகளை ஆரம்பிக்க இலங்கை கிரிக்கட் வீரர்கள் தயாராகவுள்ளனர்.

உயிரியல் ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பயிற்சிகளை நடத்தும் ஏற்பாடுகள் உள்ளதாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்தார்.

கடந்த வாரம் அணியின் தலைவர் லசித் மாலிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்தத் தீர்மானத்தை எட்டியதாக ஆர்த்தர் தெரிவித்தார்.

இதன்படி, வேகப் பந்துவீச்சாளர்களுக்கு முதலில் பயற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor