1000

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன் வைக்கப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ரீட் கட்டளையை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor