1000

புலிகளை மீளுருவாக்கியதாக தமிழ் இளைஞர் கைது?

புலிகளை மீளுருவாக்கியதாக தமிழ் இளைஞர் கைது?

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூதூர், சேருநுவர பகுதிகளில் தனியார் நிதி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட சில இளைஞர்களின் முகநூல் கணக்குகளை சிங்கள இனவாத ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம், தமிழீழ படம், மற்றும் புலிகளின் படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்ததாக, அதற்கான ஸ்கிரீன் சொட்களை அவை வெளியிட்டிருந்தன.

அத்துடன், அவர்கள் மீது புலனாய்வுப்பிரிவு நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தின.

இதையடுத்து, சிங்கள சமூக ஊடகங்களில் இது பரவலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில், அதில் தொடர்புடைய இளைஞன் ஒருவர் குற்றவியல் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

மேலும் ஐவர் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor