1000

மருத்துவமனைக்கு சென்ற அஜித்

மருத்துவமனைக்கு சென்ற அஜித்

சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கின்போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று
விசாரித்தபோது, அவரது அப்பா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் - Editor