1000

திருப்பியும் அதையே பண்ணமாட்டேன்…

திருப்பியும் அதையே பண்ணமாட்டேன்…
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்த நடிகை அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்து பிரபலமானாராம். வேற்று மொழி படங்களை நம்பி, தமிழ் பட வாய்ப்புகளை அதிகம் இழந்தாராம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அந்தப் படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சொன்னார்களாம். நடிகையும் பட வாய்ப்பு இல்லாததால் நடிக்க சம்மதித்தாராம்.

அந்தப் படம் நன்றாக ஓடவே, அதே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். ஆனால் நடிகையோ அந்த மாதிரி கதாபாத்திரத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறிவருகிறாராம்.
ஆசிரியர் - Editor