1000

நடிகையின் மகன் தற்கொலை

நடிகையின் மகன் தற்கொலை

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ’கண்ணன் என் காதலன்’ ’தலைவன்’ ‘ஊருக்கு உழைப்பவன்’ உள்பட ஒரு சில படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’வசந்த மாளிகை’ ’வாணி ராணி’ ’ரோஜாவின் ராஜா’, ‘உயர்ந்த மனிதன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ.

இந்த நிலையில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நடிகை வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்திக் என்பவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் உள்ள நிலையில், இவர் மட்டும் ஊரடங்கு காரணமாக திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கிராமத்தில் அவருடைய சொந்த வீடு ஒன்றில் சிக்கி கொண்டார்.

வெங்கடேஷ் கார்த்திக் மாதக்கணக்கில் சென்னையில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

ஆசிரியர் - Editor