1000

இந்தியாவை தாக்க சீனாவின் புதிய யுக்தி. ஓநாய் படை.

இந்தியாவை தாக்க சீனாவின் புதிய யுக்தி. ஓநாய் படை.

இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு களமிறக்கப்பட்ட ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது.

மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேபோல் ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும்.

வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரசாரங்களை முறியடிக்க ஓநாய் வீரர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இவர்கள் பேக் ஐடி கிடையாது. இதற்காக அரசே பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது.

அதாவது சீனாவின் புதிய ராஜாங்க ரீதியான திட்டங்கள் மற்றும் வெளியுறவு கொள்கையில் ஓநாய் வீரர்கள் படை களமிறக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் போர் ரீதியான ஒப்பந்தங்கள், மிரட்டல்களை இவர்கள்தான் செய்யப் போகிறார்கள்.

உதாரணமாக தற்போது தைவான் உடன் இருக்கும் பிரச்சனையை சீனாவின் அமைதியான வெளியுறவுத்துறை அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். மாறாக தைவான் பிரச்சனையை ஓநாய் படை வீரர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

தற்போது இந்தியாவிற்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் சீனா கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. வெளிப்படையாக இவர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளது இதற்கு பின் இந்த ஓநாய் வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த குழுவின் சீனாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், இராணுவ மேஜர், செய்தியாளார்கள், அரசியல் விமர்சகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு நாட்டை அவமானப்படுத்துவது. அந்நாட்டைஇகழ்ந்து பேசுவது. அந்த நாட்டை மிக மோசமாக மிரட்டுவது. ரகசியங்களை வெளியிட போவதாக மிரட்டுவது, உளவு தகவல்களை வெளியிட போவதாக கூறுவது ஓநாய் வீரர்கள் படையின் முக்கிய ஸ்டைல் ஆகும்.

இதற்கு முன் சீனாவிலிருந்த சாந்தமான வெளியுறவுத்துறை அதிகாரிகள் போல இவர்கள் இருக்க மாட்டார்கள். மிகவும் மூர்க்கமாக ராஜாங்க ரீதியான கொள்கையை இவர்கள் கொண்டு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உலக அளவில் கொரோனா காரணமாக சீனாவை அமெரிக்கா இகழ்ந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது அமெரிக்காவை இகழும் பொருட்டு ஓநாய் வீரர்கள் படைகள் களமிறக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

ஆசிரியர் - Editor II