1000

களுத்துறையில் வெடிக்க வைக்கப்பட்ட வெளிநாட்டு கைக்குண்டு

களுத்துறையில் வெடிக்க வைக்கப்பட்ட வெளிநாட்டு கைக்குண்டு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களப்புகமை, பெல்பொல பாலத்திற்கு அண்மித்த ஏரிக்கரையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட K-2100 ரக கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது களுத்துறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் வெடிகுண்டு பற்றிய விசேட நிபுணர்களால் அதே இடத்தில் வெடிக்க வைக்கப்பட்டது.

மாலை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நாவல் பழம் பறிக்கும் நோக்கத்துடன் காட்டுப் பகுதிக்குச் சென்ற போது அங்கு சிறிய பிளாஸ்டிக் (டப்பா) கொள்கலன் ஒன்றில் ஏதோவொரு பொருள் இருப்பதைக் கண்டு அவர்களின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் அதனை பரிசோதித்து பார்த்த பின்னர் சந்தேகத்துக்கு இடமான ஏதோ ஒரு மர்மப் பொருள் காட்டுப் பகுதியில் காணப்படுவதாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் குண்டை கைப்பற்றி அழித்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II