1000

கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது அமெரிக்கா!

கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது அமெரிக்கா!

கொரோனா தொற்றின் மையப்புள்ளியான அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் குறைந்து வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 730 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

உயிரிழப்புக்கள் குறைந்தாலும் அதன் பாதிப்புகள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் - Editor II