1000

வடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

வடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி அ.மி.த.க பாடசாலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையின் காவலாளியாக கடமையாற்றியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II