1000

பொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்

பொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்

பொதுத் தேர்தலை விரைவில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்றையதினம் இடம்பெற்ற வாக்காளர் தின நிகழ்வில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பாக பெரும்பாலானோர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கின்றனர்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதி சட்டத்தரணியூடாக உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளோம்.

ஜுன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான தினத்தை குறிப்பிடுவதில் சட்ட ரீதியிலான தடை ஏற்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழு இதற்காக வேறொரு தினத்தை குறிப்பிடும்.

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக முடிந்தவரையில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் விருப்பமாகும். இந்த தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைக்கும் தேவை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை.

ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றமொன்று இடம்பெற வேண்டும் என்பது அத்தியாவசியமாகும் என்பதை ஆணைக்குழு மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II