1000

கொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்!

கொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்!

அமெரிக்காவில் 20 டொலர் நாணயத் தாளுக்காக கறுப்பினர் ஒருவரை அநியாயமான முறையில் கொன்ற பொலிஸாருக்கு எதிராக நாடளாவிய ரீதியில், மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பட்டம் தற்போது அமெரிக்காவையும் கடந்து பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளிலும் விஸ்தீரணமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டகாரர்களின் முன்பு அமெரிக்க பொலிஸார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் அவர்களும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பினரை கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு வெள்ளையர் என தெரிந்தும் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் அதிகளவானவர்கள் வெள்ளையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II