அகாலமரணம்

திருமதி சிவக்கொழுந்து விநாயகமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மீசாலை விக்னேஸ்வரா ம.வி)

தாய் மடியில் : 17, May 1937 — இறைவன் அடியில் : 29, Nov 2016வெளியிட்ட நாள் : 30, Nov 2016
பிறந்த இடம் - யாழ். மீசாலை மேற்கு
வாழ்ந்த இடம் - யாழ். மீசாலை மேற்கு

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து விநாயகமூர்த்தி அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லாச்சி தமப்திகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராசையா, நல்லம்மா, தங்கம்மா, சோமசுந்தரம், சரஸ்வதி, விஜயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகநந்தினி(ஆசிரியை- மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்), நந்தகுமார்(LIB CO சாவகச்சேரி), நந்தரூபி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), நந்தகோபன்(அபிவிருத்தி உதவியாளர்- பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்), நாகசோதி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு), நாகரோகினி(ஆசிரியை- கச்சாய் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகுமாரன், சுஜந்தா, நித்தியானந்தன்(ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக்கல்லூரி), ரஜிந்தா(முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம், தெல்லிப்பளை), கோகுலன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், சாவகச்சேரி), இராஜலிங்கம்(ஆசிரியர்- எழுதுமட்டுவாள் ஸ்ரீ கணேசா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கவி, சாரங்கா, சங்கீதா, பிரியங்கன், சிந்துஜன், கவிப்பிரியன், லக்‌ஷிகன், லதுர்ஷன், திவ்யரதன், ஹரிவர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று அவரது மகளின் இல்லத்தில் பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மீசாலை மேற்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771630896
கோபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773223229
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com