பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சாம்சன்

பிறந்த நாள் : 08, Mar 2017வெளியிட்ட நாள் : 08, Mar 2017
இன்று வாழ்க்கை பயணம்
தொடரும் புது நாள்
ஒரு மைல் கல் கடந்த நாள்.

உன் வாழ்வில் பொன்மலர்
மலர்ந்த நாள்.
இந்த இனிய நன்னாளில்

உன் நிழலாய் மகிழ்ச்சி
தொடரட்டும்.

நிறைமதி போல் சந்தோசம்
பொங்கட்டும்.

வண்ணப் பூக்களாய் எண்ணங்கள்
விளங்கட்டும்.

கடலலையாய் உன்னை எப்போதும்
வாழ்த்தட்டும்.

தென்றல் உன் வாழ்க்கைப் பயணத்திற்கு
வழிகாட்டட்டும்.

கண்ணாடி மன மழலை போல் கவலைகள்
களையட்டும்.

குயில்கள் உன் செவியில் கானம்
இசைக்கட்டும்.

நட்சத்திரங்கள் உன் கருங்கூந்தளுக்கு
மல்லிகை பூச்சரம் சூடட்டும்.

முத்தென வீழும் மழைத்துளிகள் உன் மென் மனதை
நனைக்கட்டும்.

வசந்தகால மலர்கள் முகம் மலர மணம்
வீசட்டும்.

வானவில்லின் ஏழு வண்ணங்கள் கழுத்திற்கு நகையாய்
அணிவிக்கட்டும்.

காலை வான மேகங்கள் ஆடையாய் இருந்து
அலங்கரிக்கட்டும்

வானத்து தேவர்களாய் பெரியவர்கள் உன்னை
வாழ்த்தட்டும்.

Happy Birthday Kutty
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com