பிறந்த நாள் வாழ்த்துக்கள்

SANDEEV

பிறந்த நாள் : 21, Apr 2017வெளியிட்ட நாள் : 21, Apr 2017
தேனிலும் இனியவன்
தேகிடாத சுவையவன்
முள்ளில்லா மலரவன்
முகம் காட்டும் நிலவவன் .
மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள் .
கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவான் விழிகளால்
கவலை தீர்ப்பான் கனி மொழியினால்
கோபம் போல யார் நடித்தாலும்
குழந்தையவன் தான் துடிப்பான்
கொஞ்சி கொஞ்சி அருகில் வந்து
கன்னமதில் இதழ் பதிப்பான்.
சுபா வீட்டினில் இவனே தான்
மணம்வீசும் இரண்டாவது மலர்
வாழ்த்துகின்றேன் மனதால் சண்டீப் குட்டி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


BY -: மறைஆசிரியர்கள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com