22 வது பிறந்தநாள் வாழ்த்து வாழ்த்துக்கள்

அபியோலா

பிறந்த நாள் : 18, Jul 2017வெளியிட்ட நாள் : 18, Jul 2017
பிறந்த இடம் - Jaffna
வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....

இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...

நான் உன் மீது கொண்ட அன்பு
காலையில் தோன்றி மாலையில்
மறையும் சூரியனும் அல்ல...

இரவில் மட்டுமே தெரியும்
நிலவும் அல்ல..

பரந்து விரிந்த வானத்தை போல
தான் உன் மீது நான் கொண்ட அன்பு...

என்றெல்லாம் எனக்கு பொய்
சொல்ல தெரியாது...

என் உடலில் உயிர் இருக்கும் வரை
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...

தாமரை இலை மீது தண்ணீர்
எப்படி தங்குவதில்லையோ
அது போலதான் உன் மீது
எனக்கு வரும் கோபமும்
ஒரு நொடி கூட நிலைப்பதில்லை....

உன்னை பெற்றெடுத்த தாயிக்கு
பெருமையையும்...

உன்னை வளர்த்த தந்தைக்கு
வெற்றியையும்...

உடன் பிறந்த சகோதர்களான
தோழர்களுக்கு பாசத்தையும்...

உன்னால் கிடைக்க வேண்டும் என்று
இந்நாளில் உன்னை வாழ்த்துகிறேன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

By -: Terenshiya
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com