பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Shana Riaa

பிறந்த நாள் : 21, Jul 2017வெளியிட்ட நாள் : 21, Jul 2017
பிறந்தநாளில் மகிழும்
அழகு மங்கையவள்
என் அன்பு தங்கையவள்
வாழ்த்துக்கள் சொல்ல
ஆயிரம் வழிகள் நினைத்தும்
மிகச் சிறந்தது
என் தோழிக்காய் நான் எழுதும் கவிதையென்று
எழுதுகின்றேன் மழலை அவளுக்காய் ஒரு கவிதை ....

வா போகலாம் வாழ்த்துச்சொல்ல - என
பூக்களை அழைத்தேன்
புன்னகையால் இதழ் பரப்பியுள்ள அவளுக்கு
எங்கள் வாழ்த்து போதாதாம் என்றது

வா போகலாம் வாழ்த்துச்சொல்ல - என
மழைத்துளிகளை அழைத்தேன்
அவள் தந்தி மீண்டும் அழகு
துளியும் இல்லையாம் என்றது

வா போகலாம் வாழ்த்துச்சொல்ல - என
அழகிய மயிலை அழைத்தேன்
அவள் நடனத்துக்கு நிகர்
நாங்கள் இல்லையே என்றது

போதும் என் நாவால் சொல்கின்றேன் அவளுக்கு வாழ்த்து
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி ,சகோதரி

By -: Terency
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com